நிதி நிலையை சாராத கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்


நிதி நிலையை சாராத கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்
x

நிதி நிலையை சாராத கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்

திருவாரூர்

நிதி நிலையை சாராத கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாெமாழி பேசினார்.

ஐம்பெரும் விழா

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கொரடாச்சேரி ஒன்றியத்தின் சார்பில் திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியில் ஐம்பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ரவி வரவேற்றார். இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யமொழி, பூண்டி கே. கலைவாணன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ஒரு சமுதாயம் வளர்ந்து அறிவுள்ள சமுதாயமாக வரவேண்டும் என்று சொன்னால், தொடக்கக்கல்வியில் ஆசிரியர்கள் விதைக்கும் விதைதான். ஆசிரியர்களாகிய நீங்கள் என்ன விதை விதைக்கிறீர்களோ அதுதான் தொடக்கக்கல்வி, உயர்நிலைகல்வி, மேல்நிலைகல்வி என மேற்படிப்புகள் என வளர்ந்து கொண்டே செல்லும்.

கதாநாயகர்களை உருவாக்குபவர்கள்

எனவே அதை எல்லாம் பார்க்கும் பொழுது உங்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. இரண்டு பேருமே பயிர் இடுகிறீர்கள். அறுவடை பயிர்கள் மேல்நிலைப்படிப்பாக இருக்கலாம் அல்லது நல்ல பணியாளராக இருக்கலாம். ஆனால் அதற்கு விதை விதைக்கும் விவசாயிகளாக தொடக்கக்கல்வி ஆசிரியர்களை பார்க்கிறேன்.

இதற்கான நெற்பயிரை விதைக்கும் விவசாயிகளாக உங்களை நான் பார்க்கிறேன். இன்றைய காலகட்டத்தில் கதாநாயகர்கள் ஆசிரியர்களாகிய நீங்கள் தான். இன்றைக்கு மட்டுமல்ல வருங்கால கதாநாயகர்களை உருவாக்குபவர்கள் நீங்கள் தான். இதனால் உங்களை விருதுகள் வழங்கி கவுரவப்படுத்துவது பெருமையாக நினைக்கிறேன்.

உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்

நிதி நிலைமை சரியாக சரியாக ஆசிரியர்களின் நிதி சார்ந்த கோரிக்கைகள் சரி செய்யப்படும். எவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டாலும் 50 மாணவர்களுக்கு முன்னால் நின்று பாடம் நடத்தக்கூடிய நிலை தான் உள்ளது. ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியாக கவனித்து நடத்தக்கூடிய தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை. நிதி நிலையை சாராத கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். நிதி சார்ந்த கோரிக்கைகள் படிப்படியாக நிவர்த்தி செய்து தருவதாக தலைவர், பொதுச்செயலாளர்களிடம் உறுதி அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் பாலசந்திரன், நகர் மன்ற உறுப்பினர் சங்கர், வாரை பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story