ராயக்கோட்டை அருகே நீர்நிலைகளில் தவறி விழுபவர்களை மீட்பது குறித்து விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள ராமாபுரம் தென்பெண்ணை ஆற்றில், நீர்நிலைகளில் தவறி விழுபவர்களை மீட்பது குறித்து ராயக்கோட்டை தீயணைப்பு நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் அணில்குமார் தலைமை தாங்கினார். இதில் நீர்நிலைகளில் தவறி விழுபவர்களை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை மூலம் விளக்கம் அளித்தனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு, முதலுதவி அளிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஆறு, குளம், குட்டை, ஏரி உள்ளிட்டவற்றில் பாதுகாப்பாக குளிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story