கிணற்றுக்குள் விழுந்த 3 மரநாய் குட்டிகள் மீட்பு
சீர்காழி தென்பாதியில் கிணற்றுக்குள் விழுந்த 3 மரநாய் குட்டிகள் மீட்கப்பட்டது. இதை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
சீர்காழி:
சீர்காழி தென்பாதியில் கிணற்றுக்குள் விழுந்த 3 மரநாய் குட்டிகள் மீட்கப்பட்டது. இதை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
கிணற்றுக்குள் கிடந்த மரநாய் குட்டிகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி சர்வ மானிய தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் நேற்று தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள கிணற்றில் 3 மரநாய் குட்டிகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றில் இருந்து மரநாய்கள் குட்டிகளை மீட்டு மேேல கொண்டு வந்தார். அப்போது இதில் ஒரு மரநாய் குட்டி அங்கிருந்த மரத்தில் ஏறி நின்றது. மீதமுள்ள 2 மரநாய் குட்டிகளை கூண்டில் அடைத்து வைத்தனர்.
வனத்துறையினர் கொண்டு சென்றனர்
இதுகுறித்து சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தில் ஏறி நின்ற ஒரு மரநாய் குட்டியை பிடித்தனர். பின்னர் 3 மரநாய் குட்டிகளையும் கூண்டில் அடைத்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் சீனிவாசன் கூறுகையில், தனது வீட்டின் அருகில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி ஒரு வீடு பூட்டி கிடக்கிறது.
புதர் மண்டி கிடக்கிறது
இந்த வீட்டை சுற்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால் பாம்பு, மரநாய் உள்ளிட்டவை சுற்றித்திரிகின்றன. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தென்னை மரங்களில் உள்ள தேங்காய்களை மரநாய்கள் சேதப்படுத்தி வருகின்றன. பூட்டி கிடக்கும் வீடு மற்றும் கொல்லைபுறத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்