ஊட்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த எருமைமாடு மீட்பு


ஊட்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த எருமைமாடு மீட்பு
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:15:36+05:30)

ஊட்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த எருமைமாடு மீட்பு

நீலகிரி

ஊட்டி

ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதியில் உள்ள கழிப்பறை பள்ளத்தில் எருமைமாடு தவறி விழுந்தது. கழிப்பறை தொட்டி 6 அடிக்கு மேல் ஆழமாக இருந்ததால் எருமைமாட்டால் வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் ஊட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு கட்டி ஒரு மணி நேரம் போராடி எருமைமாட்டை மீட்டனர். இதற்கிடையே கழிவு நீர் தொட்டிக்கு மூடி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story