கிணற்றுக்குள் விழுந்த பசு மீட்பு
குஜிலியம்பாறை அருகே, கிணற்றுக்குள் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.
திண்டுக்கல்
குஜிலியம்பாறை அருகே உள்ள கணக்குப்பிள்ளையூரை சேர்ந்தவர் ராமன் (வயது 45). விவசாயி. இவருக்கு, அதே பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு, அவரது பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தோட்டத்தில் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் அந்த பசுமாடு விழுந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
இதுகுறித்து குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) முனீஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றில் இருந்து பசுவை உயிருடன் மீட்டனர்.
Related Tags :
Next Story