கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
நீலகிரி
கூடலூர்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் ஆனந்தவாடி அருகே தலப்புழா பகுதியைச் சேர்ந்த ஜோகி என்பவரது வீட்டு அருகே இருக்கும் கிணற்றுக்குள் ்சிறுத்தை ஒன்று தவறி விழுந்தது. இதனால் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.இதைத் தொடர்ந்து முத்தங்கா சரணாலய வனத்துறையினர் விரைந்து வந்து சிறுத்தை புலியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதைத் தொடர்ந்து முதுமலையில் இருந்து கால்நடை மருத்துவக் குழுவினர் மற்றும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் பல்வேறு கட்டங்களாக போராடி சிறுத்தை புலியை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story