கோத்தகிரி அருகே குடிநீர் கிணற்றில் தத்தளித்த சாரைப்பாம்பு மீட்பு


கோத்தகிரி அருகே  குடிநீர் கிணற்றில் தத்தளித்த சாரைப்பாம்பு மீட்பு
x

கோத்தகிரி அருகே குடிநீர் கிணற்றில் தத்தளித்த சாரைப்பாம்பு மீட்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள பாண்டியன் பூங்கா பகுதியில் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் இருந்து தண்ணீரை விநியோகம் செய்வதற்காக வந்த ஊழியர்கள் கிணற்றுக்குள் பார்த்த போது பாம்பு ஒன்று தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். உடனடியாக அவர்கள் கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இருந்த சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்தனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் அந்த சாரைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமான விட்டனர்.


Next Story