ஆதரவற்ற மாற்றுத்திறனாளி முதியவர் மீட்பு
வேலூரில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி முதியவர் மீட்கப்பட்டார்.
வேலூர்
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கால் இல்லாத மாற்றுத்திறனாளி முதியவர் வேலூர் கோட்டை சுற்றுச்சாலை பகுதியில் சுற்றித்திரிந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அந்த முதியவர் ஆதரவற்ற நிலையில் தவித்து வருவதாக வேலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ்சரவணனுக்கு அப்பகுதியை பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அவர் அந்த முதியவரை சமூக நலத்துறை அதிகாரிகள் உதவியுடன் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். அதன்படி அவரை சமூக சேவகர் ராமன் திருவண்ணாமலைக்கு காரில் அழைத்துச் சென்றார். அங்கு சமூக சேவகர் மணிமாறன் முதியவருக்கு முதலுதவி அளித்து பின்னர் முதியோர் இல்லத்தில் சேர்த்தார்.
Related Tags :
Next Story