கால்வாயில் சிக்கி தவித்த ஆடு மீட்பு


கால்வாயில் சிக்கி தவித்த ஆடு மீட்பு
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கால்வாயில் சிக்கி தவித்த ஆடு மீட்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மாதா கோவில் செல்லும் சாலையோரத்தில் மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்க்குள் நேற்று ஆடு ஒன்று தவறி விழுந்தது. தொடர்ந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி மற்றும் அலுவலர் மாதன், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் விரைந்து சென்று கால்வாயின் ஒரு பகுதியில் இருந்த இரும்பு கம்பிகளை அகற்றி ஆட்டை பத்திரமாக மீட்டனர். இதே போல் கோத்தகிரி கார்சிலி பகுதியில் உள்ள சிவகுமார் என்பவரது வீட்டின் அருகே பாம்பு ஒன்று புகுந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர். அதற்குள் பாம்பு அருகிலிருந்த புதர் மறைவிற்குள் சென்று மறைந்தது.



Next Story