காணாமல் போன தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்பு
ஆம்பூர் அருகே காமாமல் போன தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டாபர். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் செய்ததாக டாக்டர்களை, உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
ஆம்பூர் அருகே காமாமல் போன தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டாபர். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் செய்ததாக டாக்டர்களை, உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
கிணற்றில் பிணமாக மீட்பு
ஆம்பூரை அடுத்த அயித்தம்பட்டு பகுதியை சேர்ந்தவர் இயேசு (வயது 56). கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து இயேசுவின் மனைவி ராஜகுமாரி, உமராபாத் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு விசாரித்தனர்.
விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன இயேசு என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் இயேசுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இயேசு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர்களை முற்றுகை
இந்தநிலையில் நேற்று மாலை இயேசுவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இயேசுவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் செய்வதாக கூறி டாக்டர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.