கழிவுநீர் குழியில் விழுந்த தாய் -மகன் மீட்பு


கழிவுநீர் குழியில் விழுந்த தாய் -மகன் மீட்பு
x

நெல்லை தாலுகா அலுவலகம் முன்பு கழிவுநீர் குழியில் விழுந்த தாய் -மகன் மீட்கப்பட்டனர்

திருநெல்வேலி

மானூர் ஒன்றியம் ரஸ்தா செக்கடி தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய தாய் பிச்சம்மாள். இவர்கள் இருவரும் நேற்று நெல்லை தாலுகா அலுவலகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று விட்டு திரும்பி செல்லும்போது தாலுகா அலுவலக வாயிலில் தோண்டப்பட்டுள்ள கழிவுநீர் குழியில் தவறி விழுந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று தாயையும், மகனையும் கால்வாயில் இருந்து வெளியே தூக்கி விட்டனர். இருவரின் செல்போன்களும் கால்வாய்க்குள் விழுந்து விட்டது. தாய்க்கும், மகனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே பெட்ரோல் பங்க்கில் உள்ள குளியலறையில் குளித்து விட்டு ஊர் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்த வழியாக வந்த பொதுமக்கள் கூறுகையில், "கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடித்து தாலுகா அலுவலகத்திற்கும், மாநகராட்சி அலுவலகத்திற்கும் செல்லும் பாதையையும் உடனே சீரமைத்து தர வேண்டும்" என்றனர்.


Next Story