கிணற்றில் விழுந்த ஆட்டு குட்டி மீட்பு


கிணற்றில் விழுந்த ஆட்டு குட்டி மீட்பு
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 5:30 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டு குட்டி மீட்கப்பட்டது.

தேனி

போடி அருகே உள்ள மரிமூர் பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருக்கு அதே பகுதியில் தோட்டம் உள்ளது. நேற்று இவர், தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த சுமார் 90 அடி ஆழ கிணற்றில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் அவர் கிணற்றில் எட்டி பார்த்தார். அப்போது தண்ணீரில் ஆட்டு குட்டி ஒன்று தத்தளித்து கொண்டிருந்தது. இதைக்கண்ட அவர் உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போடி தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கிணற்றில் இறங்கி சுமார் 1 மணி நேரம் போராடி வலை மூலம் ஆட்டு குட்டியை உயிருடன் மீட்டனர்.


Next Story