தத்தளித்த முதியவர் மீட்பு


தத்தளித்த முதியவர் மீட்பு
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் தத்தளித்த முதியவர் மீட்கப்பட்டார்

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நேற்று 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறங்கி உள்ளார். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிக அளவு சென்றது. இதனால் முதியவர் ஆற்றில் தத்தளித்துள்ளார். இதை கவனித்த அந்த பகுதிய சேர்ந்தவர்கள் ஒரு நாட்டுப் படகில் சென்று முதியவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றி கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story