திருவெண்ணெய்நல்லூர் அருகேஏரி தண்ணீரில் சிக்கிய மூதாட்டிகயிறுகட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரி தண்ணீரில் சிக்கிய மூதாட்டி யை கயிறுகட்டி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
விழுப்புரம்
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுவானூர் கிராமத்தை சேர்ந்தவர் அங்கம்மாள் என்கிற சின்னபொண்ணு (வயது 70). இவர், நேற்று காலை சிறுவானூர் ஏரியின் வழியாக நடந்து சென்றார். அப்போது, அங்குள்ள தண்ணீர் பகுதியை கடக்க முயன்ற போது, ஆழமான பகுதியில் அவர் சிக்கிக்கொண்டார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) விநாயகம் தலைமையில் வீரர்கள் விஜயகுமார், முருகதாஸ் ஆகியோர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் ஏரிக்கு சென்று, கயிறு கட்டி ஏரிக்குள் சென்று அங்கம்மாளை பாதுகாப்பாக மீட்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story