ஆதித்தனார் கல்லூரியில் ஆய்வு கட்டுரை வடிவமைத்தல் கருத்தரங்கு
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆய்வு கட்டுரை வடிவமைத்தல் கருத்தரங்கு நடந்தது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ நலத்துறை மற்றும் ஆங்கில எழுத்தாளர் மன்றம் சார்பில், மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். ஆங்கில எழுத்தாளர் மன்ற இயக்குனர் ஷோலா பெர்னாண்டோ வரவேற்று பேசினார். நேசமணி மெமோரியல் கிறிஸ்தவ கல்லூரி ஆங்கில உதவி பேராசிரியர் சாமுவேல் நாயகம் 'ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல்' என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி வாழ்த்தி பேசினார். மாணவ நலத்துறை இயக்குனர் லெனின் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story