மழை நீரில் மூழ்கிய நெற்பயிரை வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
மழை நீரில் மூழ்கிய நெற்பயிரை வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
கொள்ளிடம் அருகே உள்ள பழையபாளையம், பச்சை பெருமாநல்லூர், வேட்டங்குடி, எடமணல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் சம்பா நேரடி நெற்பயிர் மற்றும் நடவு பயிர் தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா மற்றும் வேளாண் உதவி அலுவலர் கார்த்தி ஆகியோர் நீரில் மூழ்கிய பயிரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது அதிக மழை பெய்துள்ளதால் மழை நீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் எத்தனை ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது என்பது குறித்து விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் மழை நீரை வடிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களில் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றனர்.