பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு


பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
x

ஓசூர், பாகலூரில் பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் நகர், கிருஷ்ணகிரி பைபாஸ் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு மற்றும் பாகலூர் பகுதியில் உள்ள பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, சில பேக்கரிகளில் தயாரிப்பு மற்றும் காலாவதியான தேதி குறிப்பிடாத சுமார் 12 கிலோ உணவு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 5 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன 6 பேக்கரிகளுக்கு தலா ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இனிப்பு, கேக் மற்றும் காரவகை பலகாரங்களில் அனுமதிக்கப்பட்ட உணவு வண்ணங்களை மட்டும் குறைந்த அளவிலேயே உபயோகப்படுத்த வேண்டும் என அனைத்து உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் சுகாதாரமின்றி நடத்திவரும் 11 பேக்கரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த ஆய்வில், தளி உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துகுமார், சூளகிரி உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜசேகர் ஆகியோரும் உடன் இருந்தனர்.


Next Story