குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது
பந்தலூரில் பலத்த மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, சோலாடி, விலக்கலாடி, வெள்ளேரி ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரியசோலை மலையடிவாரத்தில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. விளைநிலத்தில் உள்ள தடுப்பணையில் வெள்ளம் நிரம்பி, கரியசோலையில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மண் சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் பார்வையிட்டனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் சிறு பாலங்களில் ஏற்பட்ட அடைப்புகள் அகற்றப்பட்டது. மேலும் மண் சரிவை அப்புறப்படுத்தினர்.
Related Tags :
Next Story