குடியிருப்போர் நல சங்க ஆலோசனை கூட்டம்
மந்தாரக்குப்பத்தில் குடியிருப்போர் நல சங்க ஆலோசனை கூட்டம்
கடலூர்
மந்தாரக்குப்பம்
கெங்கைகொண்டான் பேரூராட்சி குடியிருப்போர் நல சங்க ஆலோசனை கூட்டம் மந்தாரக்குப்பத்தில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். செயலாளர ஜோதிபாசு, பொருளாளர் கார்த்திகேயன், அலுவலக செயலாளர் தீன் முகமது, மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்நாதன், சட்ட ஆலோசகர் வக்கீல் செல்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கெங்கைகொண்டான் பேரூராட்சி வாழ் குடியிருப்போர் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரியாக செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story