இளையான்குடி பேரூராட்சி தலைவர், துணை தலைவர் ராஜினாமா
இளையான்குடி பேரூராட்சி தலைவர், துணை தலைவர் ராஜினாமா ெசய்தனர்.
இளையான்குடி,
இளையான்குடி பேரூராட்சியில் தலைவராக செய்யது ஜமிமா, துணைத் தலைவராக சபுரியத் பீவி ஆகியோர் கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கிடையே 13-வது வார்டு இடைத்தேர்தலில் பேரூர் தி.மு.க. செயலாளர் நஜிமுதீன் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து புதிய பேரூராட்சி தலைவராக நஜிமுதீன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில். காலை 11 மணி அளவில தலைவர் செய்யது ஜமிமாவும், துணைத்தலைவர் சபுரியத் பீவியும் தங்களது பதவிகளை சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கூறி, ராஜினாமா கடிதத்தை பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத்திடம் வழங்கினர். செயல் அலுவலர் இந்த கடிதங்களை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் வழங்கினார். இருவரின் ராஜினாமா கடிதங்கள் சென்னை பேரூராட்சிகளின் இயக்குனருக்கு பரிந்துரை செய்து விரைவில் புதிய பேரூராட்சி தலைவர் தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிடும் என கூறப்படுகிறது.