விசாரணைக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு


விசாரணைக்கு வந்த தேசிய புலனாய்வு   முகமை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு
x

இளையான்குடியில் விசாரணைக்காக வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடியில் விசாரணைக்காக வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

என்.ஐ.ஏ. அதிகாரிகள்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கலிபா தெருவில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த மாநில பேச்சாளர் முகமது ரோஸ்லான் என்பவரது வீடு உள்ளது. அங்கு விசாரணை நடத்துவதற்காக தேசிய புலனாய்வு முகமையை (என்.ஐ.ஏ.) சேர்ந்த அதிகாரிகள் நேற்று காலை 7 மணி அளவில் வந்தனர். அவர்களுடன் சிவகங்கை போலீஸ் அதிகாரி சிபி சாய் சவுந்தர்யன், இளையான்குடி இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசாரும் வந்திருந்தனர். அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களும், முகமது ரோஸ்லான் உறவினர்களும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

27 பேர் மீது வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக இளையான்குடி வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன், போலீசில் புகார் செய்தார்.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அல்ஹாப் (வயது 38), உமர் (42), நிஸ்சான் என்கிற காதர்(35), முகமது நவ்பல்(40), முகமது அசாருதீன்(39),ரபிக் ராஜா(40), அமீர் அலிரு(38) உள்பட 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story