டிரான்ஸ்பார்மரை மாற்ற எதிர்ப்பு- போராட்டம்
நெல்லிக்குப்பத்தில் டிரான்ஸ்பார்மரை மாற்ற எதிர்ப்பு தொிவித்து போராட்டம் நடந்தது.
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் கிறிஸ்தவ ஆலயம் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. தற்போது சாலை விரிவாக்க பணிக்காக டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று டிரான்ஸ்பார்மரை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முயன்றனர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கடை அருகே டிரான்ஸ்பார்மரை வைக்க கூடாது என்றனர்.
இதனிடையே அப்பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் டிரான்ஸ்பார்மர் வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 3 வியாபாரிகள் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.