அனைவருக்கும் 100 நாள் வேலை கிடைக்க விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் கோரிக்கை


அனைவருக்கும் 100 நாள் வேலை கிடைக்க விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Jun 2022 11:42 PM IST (Updated: 18 Jun 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

அனைவருக்கும் 100 நாள் வேலை கிடைக்க விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர்

தாந்தோணிமலையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கவேல் வரவேற்றார். 100 நாள் வேலை திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை கிடைக்கவும், அரசு அறிவித்துள்ள முழுமையான கூலி கிடைத்திடவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.100 நாள் வேலை திட்டத்தை விவசாயம் சார்ந்துள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவுப்படுத்தி வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் குப்புசாமி, ஆண்டியப்பன், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story