தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஆயிரத்து 589 வழக்குகளுக்கு தீர்வு
நாகையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஆயிரத்து 589 வழக்குகளுக்கு தீர்வு
நாகை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்தீர்வு அலுவலகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கந்தகுமார் தலைமையில் நேற்று முன்தினம் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இருந்து சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக்கொள்ள கூடிய கிரிமினல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் உள்ளிட்ட 14 ஆயிரத்து 417 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. இதில் ஆயிரத்து 589 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில், போக்சோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி மணிவண்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான கார்த்திகா, சார்பு நீதிபதி சீனிவாசன், குற்றவியல் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகப்பன், கீழ்வேளூர், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி தீப்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.