தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 911 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 911 வழக்குகளுக்கு தீர்வு
x

நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 911 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4 கோடியே 40 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 911 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4 கோடியே 40 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

நாகை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாற்றுத்தீர்வு அலுவலகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கிங்ஸ்லி கிரிஸ்டோபர் தலைமையில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இருந்து சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்து கொள்ள கூடிய கிரிமினல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்பட 15 ஆயிரத்து 541 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

3 ஆயிரத்து 911 வழக்குகளுக்கு தீர்வு

இதில் 3 ஆயிரத்து 911 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.4 கோடியே 40 லட்சம் வசூல் செய்யப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தில், போக்சோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி மணிவண்ணன், நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி நாகராஜன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான கார்த்திகா, சார்பு நீதிபதி சீனிவாசன், குற்றவியல் முதலாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகப்பன், குற்றவியல் 2-வது நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்மிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story