காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற தீர்மானம்
காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
உரிமை கரங்கள் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் 2-வது மாநில மாநாடு கரூர் வெண்ணைமலையில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வெற்றிவேல், பொருளாளர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆட்டோ, கால் டாக்சிகளுக்கு தமிழக அரசே செயலி தொடங்கி ஆன்லைன் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் சட்டம் 2019-ஐ திரும்ப பெற வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
தொடர்ந்து உயர்ந்து வரும் டோல்கேட் கட்டணங்களை குறைக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஓட்டுனர் தொழிலை பாதுகாக்க ஆட்டோ, கால் டாக்சிகளுக்கு ஸ்டாண்டு அமைக்க அரசு இடம் தந்து ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து உயர்ந்து வரும் வாகன காப்பீடு கட்டணங்களை மத்திய அரசு குறைக்க வேண்டும். தொடர்ந்து உயர்ந்து வரும் மோட்டார் சம்பந்தமான பொருட்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கர், பொருளாளர் சிவராஜ் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.