மின்கட்டண உயர்வை திரும்ப பெற தீர்மானம்


மின்கட்டண உயர்வை திரும்ப பெற தீர்மானம்
x

மின்கட்டண உயர்வை திரும்ப பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திருவாரூர்

கூத்தாநல்லூரில், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்க கூட்டம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ரகுபதி பாண்டியன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் கண்ணையன், சுரேஷ், வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ராசபாலன் பேசினார். கூட்டத்தில் பனங்காட்டாங்குடி பாசன வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story