மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்- ஜி.கே.வாசன்


மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்- ஜி.கே.வாசன்
x

உரிய நேரத்தில் பாதுகாப்பாக நடைபெற உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழாவிற்கு அனுமதிகேட்டு அப்பகுதி மக்கள் விண்ணப்பித்து இருந்தனர். அரசிடம் இருந்து அதற்கான அனுமதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பூர்வாங்க பணியில் அரசு அதிகாரிகளினால் ஏற்பட்ட காலதாமத்தால் மக்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகளும் அத்துமீறல்களும் ஏற்பட்டு அதனால் சாலை மறியல், கல்வீச்சு, தடியடி என்று விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறி இருக்கிறது.

இச்செயல் மிகவும் வருந்ததக்கது. வருங்காலங்களில் இதுபோல் ஒரு அசம்பாவிதம் நடைபெறாதவாறு தமிழக அரசு மக்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து எருதுவிடும் நிகழ்ச்சி உரிய காலத்தில், உரிய நேரத்தில் பாதுகாப்பாக நடைபெற உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story