அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x

அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி, நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திருநெல்வேலி

அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி, நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க.

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேசுவரி, மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, மானூர் ஒன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

பாரதீய ஜனதா சார்பில் சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதில் நெல்லை மாவட்ட தலைவர் தயா சங்கர், பொதுச்செயலாளர்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், முத்து பலவேசம், மாவட்ட செலாளர்கள் நாகராஜன், நயினார் பாலாஜி, கட்டளை ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், வக்கீல் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்ககுமார், உதயகுமார், பொதுச் செயலாளர் மகேந்திர பாண்டியன், மண்டல தலைவர் ராஜேந்திரன், கெங்கராஜ், பரணி இசக்கி, தனசிங் பாண்டியன், விவசாய அணி வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.-தே.மு.தி.க.

ம.தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

தே.மு.தி.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர்.

அ.ம.மு.க. -த.மா.கா.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் பரமசிவன், மேற்கு மாவட்ட செயலாளர் ஆசீர், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஆவின் அண்ணாசாமி, பேரவை செயலாளர் பேச்சிமுத்து பாண்டியன், பாளை ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் மாரித்துரை ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாநில செயலாளர்கள் சரவணன், சிந்தா சுப்பிபரமணியன், துணைத்தலைவர் சுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு ரமேஷ் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

த.ம.மு.க.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் செல்லப்பா, நெல்லை மாநகர செயலாளர் துரை பாண்டியன், மாநகர இளைஞர் அணி செயலாளர் சிவந்தி முத்துபாண்டி, ஒன்றிய நிர்வாகிகள் ரவீந்திரன், பரமசிவ பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அம்பேத்கர் சிலை முன்பு, தேவேந்திர குல வேளாளர் மக்களை ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து மாற்ற வேண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் எம்.சி.சேகர் தலைமையில் செய்தி தொடர்பாளர் முத்துவளவன், பாசறை துணை செயலாளர் எம்.சி.கார்த்திக் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். தமிழர் உரிமை மீட்பு களம் சார்பில் லெனின் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம்

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் பொதுச் செயலாளர் பாலமுருகன், நெல்லை மாவட்ட செயலாளர் பிரேம்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் தர்மராஜ், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழர் விடுதலை களம் சார்பில் நிறுவன தலைவர் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட செயலாளர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் தேசம்

மக்கள் தேசம் கட்சி மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் தலைமை நிலைய செயலாளர் திருமுருகன், நெல்லை மாவட்ட செயலாளர் பிரைட் ராமச்சந்திரன், நெல்லை மாநகர இளைஞர் அணி செயலாளர் வரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story