சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகளுக்கு மரியாதை


சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகளுக்கு மரியாதை
x

இந்து மக்கள் சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி சுற்றுலா மையத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் மாநில இளைஞரணி செயலாளர் செல்வசுந்தர், மாவட்ட அமைப்பாளர் சுடலைமணி, மத்திய மாவட்ட துணைசெயலாளர் மைனர் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story