தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறுசீரமைப்பு பணியை உடனே தொடங்க வேண்டும்;முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விஜய் வசந்த் எம்.பி. நேரில் கோரிக்கை


தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறுசீரமைப்பு பணியை உடனே தொடங்க வேண்டும்;முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விஜய் வசந்த் எம்.பி. நேரில் கோரிக்கை
x

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி., சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி., சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை ஆகியோர் சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அப்போது ரூ.253 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட துறைமுக கட்டுமான பணி உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு துவங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

மணல் திட்டுகள்...

அதேபோல் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் தாமிரபரணி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் மணல் திட்டுகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றது. அடிக்கடி மணல் திட்டுகளை அகற்ற ஏதுவாக மணல் அள்ளும் எந்திரம் ஒன்று நிரந்தரமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருக்கும்படி ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மணல் அள்ளும் எந்திரம் நிரந்தரமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இரையுமன்துறை மீனவ கிராமத்தை கடலரிப்பில் இருந்து நிரந்தரமாக பாதுகாப்பதற்காக தொடர் தூண்டில் வளைவுகள் அமைக்க ரூ.30 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு நபார்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை துரிதப்படுத்தி பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் மீனவ கிராமங்களில் கனிம மணல் எடுப்பதற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

எம்.பி., எம்.எல்.ஏ.வுடன் கோரிக்கை வைத்த போது திருவனந்தபுரம் மறை மாவட்ட தூத்தூர் மண்டலம் முதன்மை தந்தை பெபின்சன், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழும இயக்குனர் டன்ஸ்டன், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், கிளீட்டஸ், அம்புரோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story