ஈரோடு-நெல்லை ரெயில் மீண்டும் இயக்கம்


ஈரோடு-நெல்லை ரெயில் மீண்டும் இயக்கம்
x

ஈரோடு-நெல்லை ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.

ஈரோடு

ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த ரெயில் இயக்கப்படவில்லை. கொரோனா குறைந்ததை தொடர்ந்து ஈரோடு-நெல்லை பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ஈரோடு-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு நேற்று மதியம் 1.35 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

தினமும் மதியம் 1.35 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரெயில் நெல்லைக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 2.30 மணிக்கு ஈரோடுக்கு வந்தடையும்.

இதேபோல் ஈரோடு-மேட்டூர் அணை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. இந்த ரெயில் அதிகாலை 5 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு மேட்டூர் அணைக்கு சென்றுவிடும். இரவு 7 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து புறப்படும் ரெயில் 10 மணிக்கு ஈரோட்டுக்கு வருகிறது. மேலும், ஈரோடு வழியாக கோவை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நேற்று முதல் இயக்கப்பட்டது.


Related Tags :
Next Story