ஓய்வுபெற்ற துணை கலெக்டர் வீட்டில் 7½ பவுன் நகை திருட்டு


ஓய்வுபெற்ற துணை கலெக்டர் வீட்டில் 7½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 1:02 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே ஓய்வுபெற்ற துணைகலெக்டர் வீட்டில் 7½ பவுன் நகை திருடப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அருகிலுள்ள சாலைப்புதூர் இ.பி. காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 68). ஓய்வு பெற்ற துணை கலெக்டர். இவர் கடந்த மாதம் 27-ந்் தேதி வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் குப்பனாபுரம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7½ பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story