ஓய்வு பெற்ற மின்வாரிய பணியாளர்கள் குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய பணியாளர்கள் குறைதீர்வு கூட்டம் 28-ந்தேதி நடக்கிறது
திருப்பத்தூர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் ச.அ.ஜைய்னுல்ஆபுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும்,
மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் திருப்பத்தூர் செயற்பொறியாளர் கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த வாய்ப்பினை ஓய்வு பெற்ற பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story