ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1.1.2022 முதல் 20.6.2022 வரை மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், ஊராட்சி உதவியாளர் ஆகிய ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தில் 10 சதவீதம் சேர்த்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைவேலுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மகாலிங்கம் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். துணைத் தலைவர் ராமசாமி, மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் தமிழரசன், வட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


Next Story