ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. செய்யது மசூது தலைமை தாங்கினார். செயலாளர் தங்கவேல் கடந்த மாத கூட்ட அறிக்கை வாசித்தார். பொருளாளர் அப்துல் ஹக் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். மரணம் அடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிந்தனை சொல் ஓவியம் நிகழ்ச்சியில் தளவை இளங்குமரன், ஆறுமுகப் பெருமாள், முகமது காசிம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மருத்துவ புதிய காப்பீட்டு திட்டத்தில் மாநில சங்கத்தின் கோரிக்கைகளை அரசு செயல்படுத்த வேண்டும், மத்திய அரசு வழங்கியது போல் மாநில அரசும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் சோழவன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story