ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அகவிலைப்படி உயர்வு வழங்கக்கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி
ஊட்டி,
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போக்குவரத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ராமன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சஞ்சீவிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சமூக நல பாதுகாப்பு திட்டமாக மாநில அரசின் ஓய்வூதியமாக ரூ.1,600 வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story