ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்


ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
x

கடையநல்லூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நடைபெற்றது

தென்காசி

அச்சன்புதூர்:

கடையநல்லூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் செய்யது மசூது தலைமையில் நடைபெற்றது. செயலாளர் தங்கவேல் சென்ற மாதம் கூட்ட அறிக்கை வாசித்தார். பொருளாளர் அப்துல் ஹக் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். அதன் பின்னர் சிந்தனை சொல் ஓவியம் நிகழ்ச்சியில் தளவை இளங்குமரன், ஆறுமுகப்பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

1.7.2007-முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள மருத்துவ புதிய காப்பீட்டு திட்டத்தில் மாநில சங்கத்தின் கோரிக்கைகளை அரசு செயல்படுத்த வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சங்க ஆலோசகர் சுப்பையா நன்றி கூறினார்.



Next Story