ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையிடம் 8 பவுன் நகை அபேஸ்-மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையிடம் 8 பவுன் நகை அபேஸ்-மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x

சேலத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையிடம் நூதன முறையில் 8 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

சேலம் வின்சென்ட் பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 70). அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், நேற்று 4 ரோடு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் கீதாவிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அதிகளவு நகைகளை போட்டுவிட்டு வெளியே வரலாமா? என்று கீதாவிடம் கூறினர். மேலும் அவரிடம் நகைகளை கழற்றி கொடுங்கள் பேப்பரில் மடித்து கொடுக்கிறோம், பாதுகாப்பாக வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்றனர்.

இதை நம்பி அவர்களிடம் தான் அணிந்திருந்த 8 பவுன் நகையை கீதா கழற்றி கொடுத்தார். ஆனால் அவர்கள் 2 பேரும் நகையை பேப்பரில் வைக்காமல் அபேஸ் செய்துவிட்டு வெறும் பேப்பரை மட்டும் மடித்து கீதாவிடம் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து கீதா பேப்பரை திறந்து பார்த்த போது அதில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து கீதா அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story