ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர் பலி


ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர் பலி
x

ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர் பலி

கன்னியாகுமரி

களியக்காவிளை:

கருங்கல் அருகே உள்ள திப்பிரமலை பகுதியை சேர்ந்தவர் வேலப்பன் நாயர் (வயது 82), ஓய்வு பெற்ற சுகாதார ஊழியர். இவர் நேற்று காலையில் பனங்காலை வழியாக களியக்காவிளைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

களியக்காவிளை சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் வரும் போது, அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் வேலப்பன் நாயர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், களியக்காவிளை போலீசார் விரைந்து வந்து, வேலப்பன் நாயர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்ததும், லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.


Next Story