ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் தற்கொலை


ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் தற்கொலை
x
தினத்தந்தி 21 July 2023 12:15 AM IST (Updated: 21 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரம் அருகே ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அருகே ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் தற்கொலை செய்து கொண்டார்.

குலசேகரம் அருகே அண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் நாயர் (வயது 72). இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

கடந்த 11-ந் தேதி இவர் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பி வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மகன் சரத்லால் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தநிலையில் காணாமல் போன ராதாகிருஷ்ணன் கடந்த 2 நாட்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பினார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் இவர் வீட்டில் விஷம் குடித்த நிலையில் கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story