ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 47 மனுக்கள் பெறப்பட்டன.
தஞ்சாவூர்
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமை தாங்கினார். அரசு கூடுதல் செயலாளரும், நிதித்துறை, ஓய்வூதிய இயக்கக இயக்குனர் ஸ்ரீதர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) பிரேமலதா, மாவட்ட கருவூல அலுவலர் கணேஷ்குமார், முதுநிலை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஓய்வூதியர்களின் ஊதிய நிலுவை, ஊதிய நிர்ணயம், விடுப்பூதியம், திருந்திய ஓய்வூதியம், சேமநல நிதி, குடும்ப பாதுகாப்பு நிதி, மருத்துவ காப்பீடு வழங்க கோருதல் தொடர்பான 47 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் பெரும்பான்மையான மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்கள் விரைவில் தீர்வு காணப்படும் என கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார்.
Related Tags :
Next Story