நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ஓய்வுபெற்ற உடல் ஆசிரியை உடல் தானம்


நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ஓய்வுபெற்ற உடல் ஆசிரியை உடல் தானம்
x

நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ஓய்வுபெற்ற உடல் ஆசிரியை உடல் தானமாக வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் மாதாபூங்கொடி தெருவை சேர்ந்தவர் செல்லையா பிள்ளை. இவருடைய மனைவி அன்னபூரணம் (வயது87). ஓய்வு பெற்ற ஆசிரியர்.

இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு உயில் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலில், தான் இறந்த பிறகு தனது உடலை நெல்லை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் படிப்புக்கு பயன்படுத்தும் வகையில் உடல்தானம் செய்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் அன்னபூரணம் நேற்று முன்தினம் இறந்தார். அவருடைய குடும்பத்தினர் அவருடைய உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இறுதி சடங்கு செய்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மதியம் அன்னபூரணம் உடலை குடும்பத்தினர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் இறந்த அன்னபூரணம் உடல் அங்கு ஒப்படைக்கப்பட்டதை பாராட்டும் விதமாக உடல் தானம் பாராட்டு சான்றிதழை அவருடைய மகன் முத்துராஜனிடம் வழங்கினார்கள்.


Next Story