ஓய்வு பெற்ற காவல்துறை ஊழியர்கள் சங்க கூட்டம்


ஓய்வு பெற்ற காவல்துறை ஊழியர்கள் சங்க கூட்டம்
x

ஓய்வு பெற்ற காவல்துறை ஊழியர்கள் சங்க கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவல்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர்கள் இறந்தால் அவர்களுக்கு அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் மூலம் இறுதி மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்வது, ஓய்வு பெற்ற காவலர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்குவதை உயர்த்தி வழங்க வேண்டும், உயர்த்தி வழங்கப்பட்ட அகவிலைப்படிக்கு அரியர்ஸ் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற காவல் துறையினர் இறந்தால் ரூ. 5000 வழங்குவதை உயர்த்தி ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் வேலுச்சாமி, பொதுச்செயலாளர் வரங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story