ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 9 பவுன் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் பரமசிவம். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவருடைய மகனுக்கு நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூரில் திருமணம் நடந்தது. இதனால் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். நேற்று மீண்டும் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரமசிவம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கநகைகளை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story