ஓய்வுபெற்ற தாசில்தாருக்கு 6 மாதம் சிறை
காசோலை மோசடி வழக்கில் ஓய்வுபெற்ற தாசில்தாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நெல்லை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
திருநெல்வேலி
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 37). இவரிடம் வாங்கிய கடனுக்காக பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. நியூ காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் பால்ராஜன் (70), ரூ.2 லட்சத்துக்கான வங்கி காசோலை கொடுத்துள்ளார். அந்த காசோலையை செல்வகுமார் வங்கியில் செலுத்தினார்.. ஆனால் பணமில்லாமல் காசோலை திரும்பி வந்தது.
இது தொடர்பாக செல்வகுமார் நெல்லை காசோலை மோசடி வழக்கு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி அருண்குமார் வழக்கை விசாரித்து, பால்ராஜனுக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்தும், காசோலையில் குறிப்பிட்டுள்ள ரூ.2 லட்சத்தை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story