ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சங்க மாநாடு
நாகையில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சங்க மாநாடு நடந்தது.
வெளிப்பாளையம்:
நாகையில் ஓய்வுபெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர்கள்சங்க மாவட்ட மாநாடு நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் இளங்கோவன், வட்டார பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி அறிக்கை வாசித்தார். பொருளாளர் காத்தமுத்து வரவு செலவு அறிக்கையை சமர்பித்தார். மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 3 சதவீத அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்க வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒரு மாத கால ஓய்வூதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும்.குடும்ப நலநிதியை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.