ஓய்வுபெற்ற பெல் நிறுவன ஊழியரின் மகன் தற்கொலை
ஓய்வுபெற்ற பெல் நிறுவன ஊழியரின் மகன் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி
திருச்சி கல்லுக்குழி கள்ளர் தெருவை சேர்ந்தவர் சிவகுரு (வயது 70). இவர் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். யாருக்கும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் இவருடைய 3-வது மகன் சிவபாலன் (38). இவர் மதுபோதைக்கு அடிமையானார் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்த சிவபாலன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story