ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும்


ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும்
x

ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பெரம்பலூர் வட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் முதல் வட்ட மாநாடு பெரம்பலூரில் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர் ஆளவந்தார், மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். மாநாட்டில் 1-1-2022 முதல் அகவிலைப்படியை 3 சதவீதம் வழங்கிடவேண்டும். 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுகின்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 21-ந்தேதி சென்னையில் நடைபெறும் பெருந்திரள் முறையீட்டுக்கு பெரம்பலூர் வட்டத்தில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செல்வராஜ் நன்றி கூறினார்.


Next Story