கேரளாவில் இருந்து கோழி குஞ்சுகள் ஏற்றி வந்த வாகனம் திருப்பி அனுப்பி வைப்பு


கேரளாவில் இருந்து கோழி குஞ்சுகள் ஏற்றி வந்த வாகனம் திருப்பி அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து புளியரைக்கு கோழி குஞ்சுகள் ஏற்றி வந்த வாகனம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதனால் அங்கிருந்து அண்டை மாநிலமான தமிழகத்துக்கு அந்த நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக -கேரள எல்லைப்பகுதியில் உள்ள புளியரை சோதனை சாவடியில் நெல்லை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பொன்வேல், உதவி இயக்குனர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் முகாம் அமைத்து பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே வர அனுமதிக்கப்படுகின்றன. மேலும் கேரளாவில் இருந்து கால்நடைகள், வாத்துகள், கோழிகள், முட்டைகள், இறைச்சிகள், கோழி கழிவுகள் ஆகியவற்றை கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அவ்றை அனுமதிப்பது இல்லை.

இந்த நிலையில் நேற்று கேரளாவில் இருந்து வந்த ஒரு சரக்கு வாகனத்தை கால்நடை உதவி மருத்துவர் சுருளிராஜ், கால்நடை ஆய்வாளர் சுப்பிரமணியன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பிச்சையா ஆகியோர் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் கேரளாவில் இருந்து ஆயிரம் கோழி குஞ்சுகளை கொண்டு வந்திருப்பதை கண்டுபிடித்தனர். இயைடுத்து சரக்கு வாகன டிரைவரை அதிகாரிகள் எச்சரித்து, கோழிக்குஞ்சுகளுடன் லாரியை கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.


Next Story